நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
x

நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தள்ளார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

அதிமுகவின் வெற்றி சரித்திரத்தில் மகுடமாக மற்றும் ஒரு வெற்றியை நீதி அரசர்கள் வழங்கி இருக்கிறார்கள். கழகத்தை பொருத்தமட்டில் மக்கள் பணியே மகேசன் பணி என்று புரட்சித்தலைவர் சொல்வது போல மக்களுக்காகவே இந்த இயக்கம் அர்ப்பணிக்கப்பட்டது என்று புரட்சித்தலைவி அம்மா சொல்லுவார்கள். அந்த வகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய அனுபவத்தாலும் அம்மாவிடம் கற்ற பாடத்தினாலும் கழகத்தை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.

இந்த வெற்றிக்காக எடுத்த முயற்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக இடைக்கால பொது செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி ஐந்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்துக்கு தந்தார்.

ஏனென்றால் மறைந்த முதல்-அமைச்சர் அம்மாவின் மாணவர் அவர். அம்மாவிடம் பயிற்சி பெற்றவர், தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர். எனவே நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு பெருகி உள்ள ஆதரவு தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story