த. வெ.க. தலைவர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து


த. வெ.க. தலைவர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
x

த. வெ.க. தலைவர் விஜய்க்கு,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,விஜய்க்கு,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story