துறையூரில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா
துறையூரில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
துறையூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெருமாள் மலையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் ஆரோக்கியம் மேம்பட வேண்டியும், விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், முன்னாள் அரசு வக்கீல் செந்தில்குமார், இளைஞர் அணி சொரத்தூர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வேலூர் ரங்கராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், ஸ்ரீதர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.