அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை பயணம் ரத்து


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை பயணம் ரத்து
x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை மாவட்ட பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ரா. துரைக் கண்ணுவின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும்; அதனைத் தொடர்ந்து ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story