கல்வி விழிப்புணர்வு மாரத்தான்


கல்வி விழிப்புணர்வு மாரத்தான்
x

ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லை சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி- இடைகால் ஸ்டாஅக் ஹைடெக் பள்ளி சார்பில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆலங்குளம் அடுத்த பனைங்குறிச்சி கிராமத்தில் தொடங்கி கபாலிபாறை கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கும், முக்கூடல் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கும் தனித்தனியாக போட்டிகள் தொடங்கியது.

இதில் பள்ளி மாணவ-மாணவிகள் இளைஞர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அம்பை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி போஸ், ஸ்டாஅக் பள்ளி தலைவர் முருகன், பள்ளியின் தாளாளர் புனிதா செல்வி, ஐன்ஸ்டீன் கல்லூரி தலைவர் மதிவாணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன், பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் கல்லூரி செயலாளர் ஆலடி எழில்வாணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் செய்திருந்தனர்.



Next Story