இலங்கையில் ஈழம் அமைந்தே தீரும் - சீமான்


தினத்தந்தி 27 Nov 2022 8:31 PM GMT (Updated: 28 Nov 2022 6:23 AM GMT)

இலங்கையில் ஈழம் அமைந்தே தீரும் என்று கருப்பூரில் நடந்த மாவீரர் தின நிகழ்ச்சியில் சீமான் பேசினார்.

சேலம்

கருப்பூர்:

மாவீரர் தினம்

சேலம் கருப்பூர் அருகே விஜயா மஹால் திருமண மண்டபத்தில் கொங்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சி மேடையில் ஈழப்போரில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். விழாவில் கலந்து கொண்டவர்கள் மாவீரர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

ஈழம் அமைந்தே தீரும்

நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-

ஈழப்போரில் உயிரிழந்தவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். உலக தமிழர்கள் அனைவரும் விரும்புவது இலங்கையில் ஈழம் அமைக்க வேண்டும் என்பதே. எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இலங்கையில் ஈழம் அமைக்க உறுதுணையாக இருப்போம். இலங்கையில் ஈழம் அமைந்தே தீரும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை

நிகழ்ச்சியில் திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் ராஜா அம்மையப்பன், ஜெக வீரபாண்டியன், பாலசுப்பிரமணி, தங்கதுரை, ரமேஷ், மகளிர் அணி ரத்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் ெபாதுமக்களின் பயன்பாட்டுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை சீமான் தொடங்கி வைத்தார்.


Next Story