திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றி


திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றி
x

திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றியை ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் 8 எம்.வி.ஏ. திறன் மேம்படுத்தப்பட்ட புதிய மின்மாற்றியை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் திருநாவுக்கரசு தலைமையில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார். இதன் மூலம் இப்பகுதிமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வாய்ப்பு ஏற்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதில் விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், பஞ்சாயத்து தலைவர்கள் ஜி.என்.பட்டி முத்துலட்சுமி, ஆமத்தூர் குறிஞ்சி மலர், விருதுநகர் யூனியன் கவுன்சிலர் அமுதம் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக என்ஜினீயர் அன்புராஜ் செய்திருந்தார்.


Next Story