நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில்முட்டை விலை 35 காசுகள் உயர்வு465 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில்முட்டை விலை 35 காசுகள் உயர்வு465 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 16 July 2023 7:00 PM GMT (Updated: 16 July 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக அதிகரித்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்துள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 35 காசுகள் உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story