நாமக்கல் மண்டலத்தில், 2 நாட்களில்முட்டை விலை 45 காசுகள் வீழ்ச்சி4 ரூபாயாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில், 2 நாட்களில்முட்டை விலை 45 காசுகள் வீழ்ச்சி4 ரூபாயாக நிர்ணயம்
x
தினத்தந்தி 23 July 2023 7:00 PM GMT (Updated: 23 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.86-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

வடமாநிலங்களில் ஸ்ராவன் பண்டிகை நடைபெற்று வருவதால், பிற மண்டலங்களில் முட்டை விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்திலும் ஆடி மாதம் என்பதால் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே குறைந்து உள்ளது. இதுவே முட்டை விலை வீழ்ச்சிக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் 2 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் 45 காசுகள் வீழ்ச்சி அடைத்திருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story