நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் 10 காசுகள் குறைந்தது460 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் 10 காசுகள் குறைந்தது460 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 18 Aug 2023 7:00 PM GMT (Updated: 18 Aug 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

கறிக்கோழி கிலோ ரூ.121-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி கிலோ ரூ.123 ஆக ஆனது. முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் கூறினர்.


Next Story