நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்தது


நாமக்கல் மண்டலத்தில்   முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்தது
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்தது

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. இதனிடையே நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டைக்கோழியின் விலை கிலோவுக்கு ரூ.98-ஆக குறைந்தது.

கறிக்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.8 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.76 ஆக குறைந்தது.


Next Story