நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 25 காசுகள் வீழ்ச்சி490 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 25 காசுகள் வீழ்ச்சி490 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் சரிவடைந்து 490 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

25 காசுகள் வீழ்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-520, ஐதராபாத்-490, விஜயவாடா-490, மைசூரு-520, மும்பை-550, பெங்களூரு-520, கொல்கத்தா-540, டெல்லி-495.

நுகர்வு குறைந்தது

தைப்பூசம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே வெகுவாக குறைந்துள்ளது. இதுவே விலை வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும். பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.87 ஆக அதிகரித்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டை கொள்முதல் விலை கடந்த 3 நாட்களில் 55 காசுகள் குறைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.


Next Story