நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story