நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முட்டை உற்பத்தி சுமார் 10 சதவீதம் வரை குறைந்ததால், அதன் தேவை அதிகரித்து கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story