நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்ந்தது 500 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்   முட்டை விலை 25 காசுகள் உயர்ந்தது  500 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்ந்தது 500 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 25 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது:-

குளிர்காலம் தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு விலை ஏற்றம் நிலவுகிறது. தமிழகத்திலும் பண்டிகைகள் முடிந்ததன் காரணமாக முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. அதனால் முட்டை தேவை அதிகரித்து உள்ளதால் முட்டை விலையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முட்டைக்கோழி கிலோ ரூ.95 ஆக ஆனது. கறிக்கோழி கிலோ ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story