நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது545 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனிடையே கறிக்கோழி கிலோ ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.91 ஆக உயர்ந்தது. முட்டைக்கோழி கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story