நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் குறைந்தது540 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் குறைந்தது540 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 30 Jun 2023 7:00 PM GMT (Updated: 30 Jun 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் வரத்து அதிகரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டைக்கோழி கிலோ ரூ.97-ஆக உயர்ந்தது. மேலும் கறிக்கோழி கிலோ ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story