ஏகாதசி சிறப்பு வழிபாடு
பெரியகுளம் தென்கரையில் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது.
தேனி
பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசியை முன்னிட்டு கிருஷ்ணர்-ராதை சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த மையத்தில் ஹரே ராம நாம கீர்த்தனம் தொடங்கி 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹரே ராம, ஹரே கிருஷ்ணா என்ற மகாமந்திரத்தை உலக நன்மைக்காகவும், எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க வேண்டி நாம கீர்த்தனம் கூறப்பட்டது. மேலும் இரவு 7 மணிக்கு பக்த விஜயம் சொற்பொழிவு மற்றும் அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story