மாரண்டஅள்ளி அருகே தொடரும் யானையின் அட்டகாசம்
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமுட்லு பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாடி வருகிறது. இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த யானை, சிவன் கோவில் பகுதியில் சுற்றித்திரிகிறது. மேலும் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த யானையின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். இரவில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் காட்டெருமை, காட்டு பன்றிகளால் விவசாய பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story