சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை
பட்டுக்கோட்டை அருகே சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்,
பட்டுக்கோட்டை அருகே சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சொத்து தகராறு
பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 65). இவருடைய தம்பி ரவிச்சந்திரன். இவரது மகன் வீரசிங்கம். வீரசிங்கத்துக்கும் அவரது பெரியப்பா தேவேந்திரனுக்கும் இடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.சம்பவத்தன்று தேவேந்திரன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரசிங்கம், தேவேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஆத்திரமடைந்து அருகே கிடந்த கல்லை எடுத்து தேவேந்திரனை குத்தி அவரது தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதில் படுகாயமடைந்த தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தேவேந்திரனின் மகள் தேவிகா(37) பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசிங்கம் மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோரை தேடி வருகிறார்கள்.