முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வாலிபர் கைது
பணம் தராததால் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்
பணம் தராததால் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாள் வெட்டு
கும்பகோணம் அருகே உள்ள கோவனூர் சன்னதி தெருவை சேர்ந்த காசிலிங்கம்(வயது80). இவர், அரசாங்கத்தின் மூலம் கட்டப்படுகின்ற வீட்டை தனது மகன் மனோகரனிடம் வழங்கி உள்ளார். காசிலிங்கத்தின் மற்றொரு மகனான மகேந்திரன் தனக்கும் வீடு கட்ட பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு காசிலிங்கம் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் சம்பவத்தன்று காசிலிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
கைது
இதில் படுகாயம் அடைந்த காசிலிங்கம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது பற்றி நாச்சியார்கோவில் போலீசார் ெ்காலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். சிகிச்சை பெற்று வந்த காசிலிங்கம் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வழக்காக மாற்றம்
தகவல் அறிந்த நாச்சியார் கோவில் போலீசார் கொலை முயற்சி வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.