படிக்கட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு
முட்டத்தில் படிக்கட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு
கன்னியாகுமரி
ராஜாக்கமங்கலம்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 90). சம்பவத்தன்று பிரான்சிஸ், வெற்றிலை வாங்குவதற்கு அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது, தெருவில் உள்ள படிக்கட்டில் இறங்கியபோது திடீரென நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜேசுமேரி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story