கார் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம்


கார் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:30 AM IST (Updated: 4 Feb 2023 2:49 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

திண்டுக்கல்


வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியை சேர்ந்தவர் மருதாயி (வயது 60), கூலித் தொழிலாளி. இவர் வீட்டருகே கொட்டகை அமைத்து அதில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 1-ந்தேதி இவர், 2 பசுமாடுகளை அருகில் உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு திரும்ப வீட்டுக்கு அழைத்துச்சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோர்பட்டி பிரிவில் உள்ள தனியார் பால் பண்ணை அருகே பசுக்களுடன் அவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக, சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், சாலையின் குறுக்காக சென்ற ஒரு பசு மீது மோதியது. இதில் மிரண்ட பசு அங்கிருந்து ஓடியது. அப்போது அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை பிடித்திருந்த மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மேலும் பசுமாடு மீது மோதியதில் காரின் முன்பக்க கண்ணாடியும் நொருங்கியது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மருதாயியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கார் டிரைவரான சென்னையை சேர்ந்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (40) மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரியவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Next Story