நரசிங்கபுரம் தில்லை நகரில் சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
சேலம்
ஆத்தூர்
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் செழியன். நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர செயலாளர் வேல்முருகன், மாவட்ட தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவர் ஜோதி மற்றும் கட்சி நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் தேரை இழுத்தனர். விழாவில் ஊர் பெரிய தனக்காரர்கள் பரமசிவம், மணி, பாரதி, தியாகராஜன், அறிவழகன், இளங்கோவன், தாமோதரன், சிவராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story