ஊரக உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான தேர்தல்: வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு


ஊரக உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான தேர்தல்: வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு
x

திருவாரூர் மாவட்டத்தில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

உள்ளாட்சி தேர்தல்

திருவாரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியாக இருந்த குடவாசல் வட்டாரம் நெடுஞ்சேரி, கொரடாச்சேரி வட்டாரம் பத்தூர், மன்னார்குடி வட்டாரம் இடையூர் எம்பேத்தி, வலங்கைமான் வட்டாரம் வடக்குப்பட்டம் ஆகிய 4 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதே போல் குடவாசல் வட்டாரம் மணவாளநல்லூர் வார்டு எண்.5, சீதக்கமங்கலம் வார்டு எண்.3, மன்னார்குடி வட்டாரம் 54 .நெம்மேலி வார்டு எண்.5, வடகோவனூர் வார்டு எண்.2, நீடாமங்கலம் வட்டாரம் சித்தமல்லி மேல்பாதி வார்டு எண்.5, திருவாரூர் வட்டாரம் கொட்டாரக்குடி வார்டு எண்.5, கோட்டூர் வட்டாரம் நொச்சியூர் வார்டு எண்.4 ஆகிய 7 காலி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலும் நடந்தது.

போட்டியின்றி தேர்வு

இதில் வலங்கைமான் வடக்குப்பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விஜய், குடவாசல் மணவாளநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராபியத்துல் பசிரியா, மன்னார்குடி 54.நெம்மேலி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கண்ணன், நீடாமங்கலம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரஷ்யா, கோட்டூர் வட்டாரம் நொச்சியூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராமமூர்த்தி ஆகிய 5 பேர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஊராட்சி தலைவர்கள்

நெடுஞ்சேரி, பத்தூர், இடையூர் எம்பேத்தி ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் சீதக்கமங்கலம் வார்டு.3, வடகோவனூர் வார்டு.2, கொட்டாரக்குடி வார்டு எண்.5 ஆகிய 3 வார்டு உறுப்பினர் பதவி என 6 பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 9-ந் தேதி நடந்தது.

இந்த வாக்குகள் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நெடுஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவசங்கர், பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுசிலா, இடையூர் எம்பேத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மனோஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஊராட்சி உறுப்பினர்கள்

சீதக்கமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிமோகன், வடகோவனூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தனபால், கொட்டாரக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழை அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்.


Next Story