மின் விபத்து தடுப்பு செயலி.. மின்சார வாரியம் அறிமுகம்


மின் விபத்து தடுப்பு செயலி.. மின்சார வாரியம் அறிமுகம்
x

தமிழ்நாடு மின்சார வாரியம், ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம், ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின் விபத்துகளால் ஊழியர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, மின் விபத்து தடுப்பு பணிக்கு, தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின் வாரியம் முடிவு செய்தது.

இதன்படி, "டான்ஜெட்கோ சேப்டி - உன் பாதுகாப்பு உன் கையில்" என்ற மொபைல் போன் செயலி, வரும் 1-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இதன்படி, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என அண்மையில் மின்சார வாரியம் தெரிவித்த நிலையில், புதிய செயலி வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


Next Story