மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

திருவாரூரில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் மின்வாரிய தொழிற் சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பொறியாளர் சங்க திட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. திட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கணக்காயர் கள தொழிலாளர் சங்க திட்ட செயலாளர் தனசேகரன், ஐக்கிய சங்கம் திட்ட செயலாளர் அருள்தாஸ், அண்ணா தொழிற் சங்க திட்ட தலைவர் முருகானந்தம் உள்பட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.


Next Story