அந்தியூர் அருகே யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க மின் வேலி


அந்தியூர் அருகே யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க மின் வேலி
x

அந்தியூர் அருகே யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க மின் வேலி

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வனத்துறை பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கிணத்தடி, காக்காயனூர் ஆகிய 2 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு அந்தியூர் வனத்துறையின் சார்பில் யானைகள் நுழைவதை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைக்கப்பட்டு கிராமங்களை சுற்றிலும் சூரிய மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. கிராமங்களில் இருந்து வெளியே வருவதற்கும், உள்ளே செல்வதற்கும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மின்சார கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்தியூர் வனச்சரகர் முருகேசன், வனவர் சக்திவேல் ஆகியோர் கூறும்போது, 'இதன் மூலம் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து மனித உயிர்களை சேதப்படுத்துவது தடுக்கப்படுகிறது. மேலும் விவசாய நிலங்களை பாதுகாக்கவும் வனத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு் உள்ளது' என்றனர்.


Next Story