கருப்பூர் அருகே நடிகர் சரவணனின் தோட்டத்தில் மின் மோட்டார் திருட்டு


கருப்பூர் அருகே  நடிகர் சரவணனின் தோட்டத்தில் மின் மோட்டார் திருட்டு
x

கருப்பூர் அருகே நடிகர் சரவணனின் தோட்டத்தில் மின் மோட்டார் திருட்டு போனது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கருப்பூர்,

சேலம் கருப்பூர் அருகே வட்டக்காடு வனப்பகுதியை ஒட்டி மஞ்சயன் காடு பகுதியில் சேலத்தை சேர்ந்த பிரபல நடிகர் சரவணனுக்கு சொந்தமாக 5 ஏக்கரில் தோட்டம் உள்ளது. இங்குள்ள மின் மோட்டார் சமீபத்தில் திருட்டு போனது. இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று செங்காடு தாத்தையங்காரப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மணிவேல் (வயது 20) என்பதும், நடிகர் சரவணனின் தோட்டத்தில் மின் மோட்டார் திருடியதையும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மின் மோட்டாரை மீட்டனர்.


Next Story