மின் மோட்டார் திருட்டு
திருக்கோவிலூர் அருகே மின் மோட்டார் திருட்டு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதலாக தென்பெண்ணை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமை அடையாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு கும்பல் ஒன்று பேரூராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாரை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் மோட்டார் திருட்டு குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்மோட்டாரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.