கார் மோதி மின் கம்பம் சேதம்


கார் மோதி மின் கம்பம் சேதம்
x
தினத்தந்தி 6 July 2023 2:15 AM IST (Updated: 6 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி மின் கம்பம் சேதம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா வழியாக நேற்று அதிகாலை ஒரு கார் வந்து கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து, மின்சார ஓயர்கள் அறுந்து தொங்கின. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோப்பனூர்புதூரை சேர்ந்தவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. பின்னர் நேற்று காலை புதிதாக மின் கம்பம் நடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு அந்த பகுதியில் மின் வினியோகம் சீரானது. இதற்கிடையில் மின் கம்பம் சீரமைப்பு பணிகளுக்கு உரிய தொகையான ரூ.15 ஆயிரத்தை கார் உரிமையாளர் செலுத்தியதால் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story