மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தம்


மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தம்
x

கொள்ளிடம் பகுதியில் மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே பூசை நகர் பகுதியில் இருந்த ஒரு புங்கமரம் திடீரென முறிந்து மின் கம்பம் மற்றும் கம்பிகள் மீது சாய்ந்தது. இதனால் மின் கம்பி அறுந்து மின் கம்பம் தெருவில் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மின் கம்பத்தை நட்டு மின் கம்பியை சரிசெய்து சீரான மின்சாரம் வழங்கினர். இதனால் கொள்ளிடம் பூசை நகர், குத்தவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேர மின் தடைக்குப் பிறகு மீண்டும் மாலை மின்சாரம் வழக்கமாக வழங்கப்பட்டது. மின் கம்பிகள் தெருவில் அறுந்து விழுந்த போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.


Next Story