கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலக நுழைவு வாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை கிழக்கு கோட்ட சி.ஐ.டி.யூ. தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். கோட்ட துணை செயலாளர் பாவேந்தன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மின்வாரிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். டெண்டர் முறையினை ரத்து செய்ய வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனசை உடனடியாக வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் சென்னையில் மின்வாரிய தலைமையகம் முன்பு நடக்கிற உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் திரளான மின்ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் சங்கர் நன்றி கூறினார்.


Next Story