திருமண நிகழ்சிக்காக வண்ண விளக்குகள் அமைக்கும் போது கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு


திருமண நிகழ்சிக்காக வண்ண விளக்குகள் அமைக்கும் போது கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு
x

திருமண நிகழ்சிக்காக கோவில் கோபுரத்தில் வண்ண விளக்குகளை அமைக்கும் போது கால் தவறி கீேழ விழுந்த எலக்ட்ரீசியன் பலியானார்.

திருவள்ளூர்

எலக்ட்ரீசியன் சாவு

திருவள்ளூர் அடுத்த மேல் நல்லத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 38). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். கீழ்நல்லாத்தூர் எல்லையம்மன் கோவிலில் இன்று நடைபெற இருந்த திருமணத்திற்காக வண்ண விளக்குள் அமைக்க நேற்று முன்தினம் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி கோவில் உச்சியில் இருந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக ஆற்காடு குப்பம் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த முகவரி தெரியாத நபர் என்பதும், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story