பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு


பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
x

பேரம்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்யும்போது மின்சாரம் தாக்கி எல்க்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

மின்சாரம் தாக்கியது

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி ஜார்ஜ் தெருவை சேர்ந்தவர் இன்னாச்சியார் (வயது 40). எலக்ட்ரீசியன். கடந்த 2-ந்தேதி அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அதை சரி செய்வதற்காக இன்னாச்சியாரை அழைத்தனர்.

இதை தொடர்ந்து அவர் அங்கு இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்ய முயன்றார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மப்பேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story