கீரிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி


கீரிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
x

கீரிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார்.

எலக்ட்ரீசியன்

குலசேகரம் அருகே உள்ள பிளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சாம்சன் (வயது42). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகவில்லை. தற்போது கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் நீதிபுரம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் சகோதரி வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாம்சன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

பலி

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக புத்தேரி அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாம்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கீரிப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story