மின்இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்மேற்பார்வை பொறியாளர் தகவல்


மின்இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்மேற்பார்வை பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 26 July 2023 7:00 PM GMT (Updated: 26 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலகங்களில் வீடு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாம் ஒரு மாத காலம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெறும்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி கட்டணம் செலுத்திய அன்று உடனடியாக பெயர் மாற்றம் வழங்க இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து நிர்ணயிக்கப்பட்டு உள்ள கட்டணமாக ரூ.726 செலுத்தி, இந்த முகாமின் மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story