நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், சங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜுனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், வேப்பனப்பள்ளி, தாசிரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story