நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல்லில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ராசிபுரம்
ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராசிபுரம் தாலுகா, மெட்டாலா துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெட்டாலா, பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரிய கோம்பை, பெரப்பன்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணைமின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.