மின் இணைப்பு தொடர்பாக மின்வாரியம் அதிரடி உத்தரவு


மின் இணைப்பு தொடர்பாக மின்வாரியம் அதிரடி உத்தரவு
x

புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை புதுப்பிக்க கூடாது எனவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை அகற்றுவதோடு, கணக்கையும் முடித்து வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார விநியோக சட்டத்தில், "தாழ்வழுத்த பிரிவின் கீழ் மின் இணைப்பு பெற்ற நுகர்வோர், 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும் எனவும், அவரிடம் இருந்து நிலுவைத் தொகை மற்றும் புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை பொறியாளர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை நேரடியாக உறுதி செய்து, கணக்கு முடிக்கும் பணிகளை மே 31க்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை வாரந்தோறும் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க கூறி, வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story