விஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை முயற்சி
விழுப்புரத்தில் விஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை முயற்சி மேற்கொண்டனா்.
விழுப்புரம்:
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 50). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 7 மணியளவில் பணி முடிந்து சதீஷ்குமார் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரிடம் ஏன் வாந்தி எடுக்கிறீர்கள் என்று அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு பணி முடித்துக்கொண்டு வரும்போதே விஷம் குடித்துவிட்ட வந்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் சதீஷ்குமாரை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.