தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு


தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு
x

தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் கோட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் முதல்-அமைச்சரின் ஆணையின்படி விவசாய மின் இணைப்புப் பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறைபடுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். எனவே விவசாய பெருமக்கள் செயற்பொறியாளரை அணுகி இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story