திருத்தணியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள், அடிபம்புகளை அகற்றாமல் நடைபாதை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருத்தணியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள், அடிபம்புகளை அகற்றாமல் நடைபாதை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

திருத்தணியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள், அடிபம்புகளை அகற்றாமல் ரூ.1¼ கோடியில் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருத்தணியில் புகழ் பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். விசேஷ நாட்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையால் திருத்தணியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

ரூ.1¼ கோடி செலவில்...

இதையடுத்து நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெடுஞ்சாலை துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் சாலையோர பகுதிகளை விரிவுபடுத்தி சிமெண்டு கற்கள் மூலம் நடைபாதை அமைக்கும் பணிகள் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, அக்கையா நாயுடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், கை பம்புகள், மின்பெட்டிகள் போன்றவற்றை அகற்றாமல் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகின்றன. நடைபாதை அமைக்கும் பணியின் போது சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்கள், கை பம்புகள், மின் பெட்டிகளை முறையாக அகற்றிவிட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story