மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
x

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

சென்னை,

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து இன்று அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட தலைநகரில் அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story