மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...!


மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...!
x
தினத்தந்தி 25 July 2022 9:25 AM GMT (Updated: 25 July 2022 9:45 AM GMT)

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க. அரசின் செயல்களைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

  • கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளைக் கண்டித்து கைகளில் அரிக்கன் விளக்கு ஏந்தி கோஷங்கள் முழங்கினர்.
  • ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சதன் பிரபாகர், முத்தையா, கழக மகளிர் அணி மாநில இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை ரவுண்டானா அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பா.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
  • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொணடர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • ஈரோடு மாவட்டம் கோபியில் மின் கட்டண உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டு அதிமுக தொண்டர்கள் கோரிக்கைகை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்.
  • வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்தி ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்காண அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
  • நாமக்கல் பூங்கா சாலையில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
  • திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளர் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையில் தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
  • குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை வகித்தார். நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் மெர்லியன்ட்தாஸ் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணைச்செயலாளர் மேரிகமலாபாய், பொருளாளர் சில்வெஸ்டர், கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவசெல்வராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.
  • தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே அ.தி.மு.கவினர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  • மதுரை கருப்பாயூரணி பகுதியில் மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story