மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் புதுக்கோட்டை கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சித்தையன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி திட்ட செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர். தொழிற்சங்கங்களுடன் மின்வாரியம் 22.2.2023 அன்று போடப்பட்ட ஒப்பந்தப்படி 6.1.1995 முதல் இன்றுவரை பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து புதிய பஸ் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் கலைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே மொத்தமாக சென்று மனு கொடுக்க முயன்றனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டும் மனு கொடுக்க அனுமதி அளித்தனர். அதன்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story