மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 7:07 PM GMT (Updated: 5 July 2023 7:32 AM GMT)

திருப்பத்தூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலமாக சென்று கலெக்டர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். ராஜசேகர், அருண்குமார் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.ஜோதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாநில செயலாளர் ஏங்கிள்ஸ், விருத்தாச்சலம் சந்திரசேகரன், வெங்கடேசன் உள்பட ஏராளமானனோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களுடன 2018-ம் ஆண்டு

போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்திட வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் வாணியம்பாடி மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் 5 பேர் சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளிடம் மனு அளித்தனர்.


Next Story