மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடந்தது.
திருச்சி
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும். ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் அகஸ்டின், மாநகர செயலாளர் செல்வராஜ் உள்பட புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூர் வட்ட செயலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் திருச்சி மண்டலத்தில் உள்ள ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story