மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10-ந் தேதி வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை தமிழக மின்வாரிய ஊழியர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்த ஆயத்த விளக்க கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் கோவை டாடாபாத்தில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலக வாயில் முன் நடைபெற்றது.
இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசும் போது, மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் காலிபணியிடங்க ளை நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை 1.12.19 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல் உள்ள சலுகைகள் வழங்க வேண்டும்.
மின்வாரிய ஊழியர்கள் பெற்று வந்த 23 சலுகைகளை பறித்திடும் மின்வாரிய ஆணை-2-ஐ திரும்ப பெற வேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர்.
Next Story