மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் நான்கு ரோடு அருகே உள்ள மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேங்மேன் பயிற்சியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவை விரைந்து வழங்க வேண்டும். விடுப்பு பயணப்படி சலுகைகளை வழங்க வேண்டும். விரிவாக்க பணிகள் மட்டும் வழங்க வேண்டும். பணி வரையறை செய்து உத்தரவு வழங்க வேண்டும். கள உதவியாளராக பணி மாற்றம் செய்திட வேண்டும். மின்விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி முறையாக பாதுகாப்பு வகுப்பு நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். பயிற்சி காலத்தை 2 ஆண்டுகள் என்பதை 3 மாத காலமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட பொருளாளர் கண்ணன் உள்பட அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story